இது தான் சிறுத்தை தோல் .சொறிந்துசொறிந்து வெளுத்துப் போனதால் வந்த பெயர்.LEOPARD SKIN.
Wednesday, 19 October 2011
புத்தரா ?? ரங்கநாதரா ??
கடந்த மாதம் குமரகம் சென்றிருந்தோம் .அங்குள்ள ரிசார்ட்டில் இந்த சிலையை பார்த்தவுடன் நம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று நினைத்தேன்
seal limbs
இந்த பையனின் அம்மாவுக்கு கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் வந்ததாம்.டாக்டர்-இடம் காட்டக்கூடாது என்று பாட்டி சொன்னாராம்.(SEAL LIMB-உடன் பிறக்கும் குழந்தை நான் 25 வருடங்களுக்கு முன்பு படித்தது.பார்த்ததே இல்லை .ஏன் என்றால் ,அது THALIDOMIDE என்னும் மசக்கைக்கு சாப்பிட்ட மாத்திரையினால் வந்தது என்று கண்டு பிடித்து BAN செய்து விட்டார்கள்.)
Tuesday, 18 October 2011
முடி போச்சே
TRICHOTILLOMANIA |
10 ம் வகுப்பு படிக்கும் போதும், 12 ம் வகுப்பு படிக்கும் போதும்,இந்த மாதிரி ஆகி விடுகிறார்கள் .மன அழுத்தம் அந்த அளவு.முடியை சுருட்டிக் கொண்டு படிப்பார்கள்.அப்படியே பிடுங்கி விடுவார்கள்.(சிலர் அம்மாவுக்கு தெரியக்கூடாது என்று விழுங்கி விடுவார்கள்-அது வயிற்றில் பந்து போல் சுருண்டு அறுவை சிகிச்சை வரை கொண்டு போய் விடும் ).
என்னிடம் வரும் போது இந்தப் பெண்கள் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.அம்மாவின் tension தான் சகிக்க முடியாததாய் இருக்கும்.ஏன் என்றால் எவ்வளவு மார்க் எடுப்பது,எவ்வளவு செலவு செய்கிறேன் ,நண்பியின் பெண் எவ்வளவு மார்க் எடுக்கிறாள் என்ற என்ற torture-ஐ கொடுப்பது அம்மா தான்.அப்பா பாவம் .
Monday, 17 October 2011
சோப்பு போடுவது
சோப்பு போடுவது எல்லாருக்கும் பிடிக்கும்.அதற்காக இரண்டு தடவை ஒரே நேரத்தில் போட்டால் தோல் வறண்டு , வெடிப்பு வந்து விடும்.கன்னத்தில் வெண் புள்ளிகள் தோன்றலாம்.
Subscribe to:
Posts (Atom)